யாழில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வெள்ளை வானில் வந்தவர்களால் அச்சுறுத்தல்!

யாழ். மிருசுவிலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வெள்ளை வாகனத்தில் வரும் இனந்தெரியாத நபா்கள் அச்சுறுத்தும் வகையில் விபரங்கள் சேகாித்து சென்றுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று பிற்பகல் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருக்கின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில்,

மிருசுவில் பகுதியில் கடந்த 2000ம் ஆண்டு 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டடிருந்தனர். குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் எங்களுடைய வீடுகளுக்கு வெள்ளை வாகனத்தில் வந்த சிலர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் எங்கள் விபரங்களை சேகரித்தச் சென்றிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட ஒருவரை தேடி வெள்ளை வாகனத்தில் வந்த 4 பேர் விசாரித்துள்ளனர்.
dfgdfgfd யாழில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வெள்ளை வானில் வந்தவர்களால் அச்சுறுத்தல்!

அதேபோல் மற்றொருவரின் வீட்டுக்கு கடந்த 11ம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் படுகொலை நடந்த இடம் மற்றும் குடும்பத்தில் இறந்தவர்கள் யார்? என்பனபோன்ற தகவல்களை பெற்றுச் சென்றிருக்கின்றனர்.

படுகொலை சம்பவத்தில் சிறையில் இருந்த இராணுவ சிப்பாய் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான சில நாட்களிலேயே இவ்வாறான அச்சுறுத்தல் எங்களுக்கு விடுக்கப்படுகின்றது. மேலும் முதலில் புலனாய்வு பிரிவினை சோ்ந்த 8 பர் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் எங்குள்ளது? என விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. என பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.