யாழில் கொப்பேக்கடுவவிற்கு அஞ்சலி

யாழ். அராலித்துறையில் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த முன்னாள் வடபிராந்திய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவவின் 27ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு 09.08 அன்று அராலியில் நடைபெறுகின்றது.

அராலியில் அமைக்கப்பட்டுள்ள கொப்பேக்கடுவ நினைவுத்தூபியில், யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தலைமையில் இந் நிகழ்வு நடைபெறுகின்றது.

இந்த அஞ்சலி நிகழ்வில் 52ஆவது படையணி தளபதியும், சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் மேஜர் ஜெனரல் விமல விஜேரத்ன, றியர் அட்மிரல் மொஹான் ஜயகம, கேணல் எச்.பி.ஸ்டீபன், கேணல் வை.என்.பலிபான, கேணல் ஜி.எச்.ஆரியரத்ன, லெப்.கேணல். நளின் டி அல்விஸ், லெப்.கொமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்.கொமாண்டர் சி.பி.விஜேபுர ஆகியோரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.