மேற்கு வங்கத்தில்  வாக்குப் பதிவின்போது வன்முறை –  4 பேர் பலி

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலின் இன்றைய நான்காவது கட்ட வாக்குப்பதிவின்போது, மத்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ஆம் திகதியுடன் முடிவடைந்துவிட்ட நிலையில், மேற்குவங்கத்தில் மட்டும் ஏப்ரல் 29ஆம் திகதிவரை மொத்தம் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், இன்று (ஏப்ரல் 10) 44 தொகுதிகளில் நடைபெற்று வரும் நான்காவது கட்ட வாக்குப்பதிவில் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, கூச் பெஹார் மாவட்டத்தின் சிதால்குச்சி பகுதியில் தங்களை தாக்க வந்தவர்கள் மீது சிஐஎஸ்எஃப் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாக பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றி பிபிசி