முள்ளிவாய்க்கால் படுகொலை: ஒருபோதும் மறக்க முடியாத வகையில் கண்டிக்கப்பட வேண்டும்-கனேடிய சட்டமன்ற உறுப்பினர்

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த அட்டூழியங்கள் எனவும் ஒருபோதும் மறக்க முடியாத வகையில் கண்டிக்கப்பட வேண்டும் எனவும் கனேடிய தேசிய சட்டமன்றத்தின் அலுவலக உறுப்பினர் சோனா லகோயன் ஒலிவியர் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப்போரின் முடிவில் 70,000 இற்கு மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்களின் உயிர்களைப் பலிகொண்ட முள்ளிவாய்க்கால் படுகொலை, தமிழின அழிப்பை நினைவுகூரும் நாளாக மே 18 ஆம் திகதியை கனேடிய அரசாங்கம் கடந்த ஆண்டு அங்கீகரித்துள்ளது.

14 ஆவது ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாளில், இந்த நாளை நினைவு கூர்வதே அத்தகைய அவலம் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு தான். இந்த மனிதாபிமானமற்ற செயல்கள், மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த இந்த அட்டூழியங்கள், ஒருபோதும் மறக்க முடியாத வகையில் கண்டிக்கப்பட வேண்டும்.

அன்பான தமிழ் சமூகமே, எங்கள் கியூபெக் சமுதாயத்திற்கு நீங்கள் செய்த பங்கிற்கு நன்றி, சோமேடியில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! எனவும் தெரிவித்துள்ளார்.