முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுஷ்டித்த சிவாஜி லிங்கம் கைதாகி விடுதலை

முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் தமிழாராய்ச்சி மண்டபத்திற்கு முன்பாகவுள்ள தூபியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியபோதே பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் பொலிஸாருடனான கடும் வாக்குவாதத்தின் பின்னர் எச்சரிக்கையுடன் அவர் விடுதலை செய்யப்பட்டதாக தெரியவருகிறது.