முல்லைத்தீவில் மீன் பிடிக்க தென்னிலங்கை மீனவர்களுக்கு அனுமதி

முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தில் தென்னிலங்கை மீனவர்களின் தொழில் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

இதில் நாயாறு பிரதேசத்தில் தொழிலில் ஈடுபட்டுவரும் சிலாபம் கருக்குப்பனை மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 150 படகுகளுக்கு அனுமதி வழங்குவதற்கும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மேலும், முல்லைத்தீவு மாவட்ட மீனவர் பிரதிநிதிகளும் கருக்குப்பனை மீனவர் பிரதிநிதிகளும் இணைந்த குழு ஒன்றினை அமைத்து, அனுமதிக்கப்படாத படகுகள் மற்றும் சட்ட விரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துவது எனவும் பொது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

நாயாறுப் பிரதேசத்தில் பூர்வீகமாக தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட சுமார்  25 படகுகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் ஒப்புதலுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் சுமார் 200 இற்கும் மேற்பட்ட படகுகளுக்கு கடற்றொழில் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 1000இற்கும் மேற்பட்ட படகுகள் தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதாக மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.