Home செய்திகள் முல்லைத்தீவில் வீசிய கடும் காற்று கன மழை வீடுகள் பல சேதம்

முல்லைத்தீவில் வீசிய கடும் காற்று கன மழை வீடுகள் பல சேதம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஓட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பனிக்கன்குளம் கிழவன்குளம் பகுதிகளில் கனமழையுடன் வீசிய கடும் காற்று காரணமாக பல வீடுகள் பாதிக்கப் பட்டிருக்கின்றன.

received 1175040782975609 முல்லைத்தீவில் வீசிய கடும் காற்று கன மழை வீடுகள் பல சேதம்

நேற்று மாலை நான்கு முப்பது மணி அளவில் குறித்த கிழவன்குளம் , பனிக்கன்குளம், மாங்குளம் பகுதிகளில் கன மழை பொழிந்தது. இதன்போது திடீரென வீசிய கடும் காற்று காரணமாக பல வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு பல சேதங்களை ஏற்படுத்தி இருக்கின்றது.


மேலும் வீடுகளுக்குளும் மழைநீர் புகுந்து பல பொருட்களும் நாசமாகி உள்ளன. கிழவன்குளம்  பகுதியில் வாழ்வாதாரத்திற்காக கோழிப்பண்ணை நடத்தி வந்த ஒருவருடைய கோழி பண்ணையில் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்து கோழிக்கூடு சேதமடைந்துள்ளதோடு கோழிகள் பல உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிகளின் சேதவிபரம் தொடர்பில்  கிராம அலுவலர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்து மக்களுடைய நிலைமைகளை நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.

Exit mobile version