முன்னாள் அமைச்சர் ரிஷாட் மற்றும் அவரது சகோதரரை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவைப் பெற்றுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவா்கள் இருவரையும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கோரி பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக காவல்துறையினர் இன்று கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலை குண்டுதாரிகளுக்கு உதவினார்கள்  என்ற குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன்  கடந்த 24-ஆம் திகதி   கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.