முகநூல் நிர்வாகத்தில் இந்திய ஆதிக்கம்,தடையும்,பதிவு நீக்கமும்

முகநூலில் இந்திய,சிறிலங்கா ஆதிக்கம் அதிகரித்து தமிழீழ விடுதலைப் போராட்டம் ,மற்றும் இந்திய எதிர்ப்பு தொடர்பான செய்திகள் அகற்றப்படட்டும்,குறித்த நபர்களின் முகநூல் முடக்கப்பட்டு வருவது வெளிப்படை.அண்மைக் காலங்களில் அநேக செயற்பாட்டாளர்களின் முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டு வருவது நாமறிந்ததே.

இந்த வகையில் கடந்த ஒரு மாதமாக பாலன் தோழர் என்பவரின் முகநூல் முடக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக அவர் கூறியிருக்கும் விடையங்களை இங்கு தருகிறோம்.இவர் ‘சிறப்புமுகாம் எனும் சித்திரவதை முகாம்’ என்ற நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தடை காரணமாக கடந்த ஒரு மாதமாக இந்த முகநூலில் என்னால் பதிவுகள் செய்ய முடியவில்லை.என் பதிவுகளைக் காணவில்லையே என கேட்டவர்களுக்குகூட பதில் எழுத முடியாத அளவிற்கு தடை.

இந்திய உளவு பாகம் – 2 என்ற எனது பதிவு முகநூலின் சமூக விதிகளுக்கு எதிராக இருப்பதாக கூறியே இந்த தடை விதிக்கப்பட்டது.

ஆச்சரியம் என்னவெனில் எனது வேண்டுகோளுக்கு இணங்க மறு ஆய்வு செய்து எனது பதிவு விதிகளுக்கு உட்டபட்டது என மீண்டும் இடம் பெறச் செய்துள்ளனர்.

ஆனால் என்மீது போடப்பட்ட தடையை நீக்கவில்லை. ஏன் தடையை நீக்கவில்லை என நான் கேட்டதற்கும் பதில் தரவில்லை.

அதைவிட ஆச்சரியம் என்னவெனில் என் பதிவுகளைக் காணவில்லை என்றவுடன் எனக்கு ஏதோ ஆபத்து என்று அஞ்சி யாரோ ஒருவர் முகநூல் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளார்.

இதனால் அமெரிக்க முகநூல் நிர்வாக அலுவலகத்தில் இருந்து ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “நீ ஓ கே யா? “ என கேட்டார்.

முகநூல் நிர்வாகத்தில் இந்திய ஆதிக்கம் அதிகரித்துவிட்டதால் இந்திய எதிர்ப்பு பதிவுகள் நீக்கப்படுகின்றன.எனவே என் பதிவுகள் நீக்கப்படுவது மட்டுமல்ல என் முகநூலே முழுமையாக தடை செய்யப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.

ஆனாலும் அதுவரை என் எழுதக்கள் தொடரும் என்பதை உறுதியாக கூறுகின்றேன்.’

என அவர் தனது பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தார். இது இன்று நடைபெறும் ஆயிரக்கணக்கான சம்பவங்களில் ஒன்றுதான்.இப்படியான நடவடிக்கைகள் ஒட்டுமொத்த தமிழினத்திற்கு மிக பாதகமானவையே. இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழினம் ஒன்றிணைந்து நடவடிக்கையில் இறங்கா விடின்
இந்த நடவடிக்கைகள் இன்னும் வலுப்பெறும்.

இந்த விடையம் தொடர்பாக இலக்கில் வெளிவந்த கட்டுரை –

தமிழினத்தின் மீதான முகநூலின் அடக்குமுறை – நாம் என்ன செய்யப்போகின்றோம்? – வேல்ஸ்சில் இருந்து அருஷ்