முகக் கவசம் அணியாவிட்டால் 10 ஆயிரம் ரூபா அபராதம்; புதிய சட்டம் இலங்கையில் வருகின்றது

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றல் போன்ற சுகாதார விதிகளை மீறினால் 6 மாதம் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய சட்டத்தை வர்த்தமானி மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நடைமுறை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் கொரோனா வைரஸ் பரவக்கூடிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலேயே நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.