Tamil News
Home உலகச் செய்திகள் மியான்மர்  மக்கள் போராட்டத்தில் 18 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொலை

மியான்மர்  மக்கள் போராட்டத்தில் 18 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொலை

மியான்மரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு நடந்துவரும் தொடர்ச்சியான போராட்டங்களில்  18 பேர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

மியான்மரின் யங்கூன், தாவெய், மாண்டலே உள்ளிட்ட நகரங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரங்களில் நடந்த இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின்போது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல் துறையினர் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பெப்ரவரி 1ஆம் திகதி மியான்மரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அங்கு தொடர்ச்சியாக போராட்டம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version