மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின் முதல் முறையாக நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட  ஆங் சான் சூகி

மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு முதல் முறையாக ஆங் சான் சூகி நீதிமன்றத்தில் நேரடியாக முற்படுத்தப்பட்டுள்ளார்.

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை இராணுவம் அறிவித்துள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும்  மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இது வரையில் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட 700க்கும் மேற்பட்டவர்கள் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஆட்சி கவிழ்ப்புக்கு பின் முதல் முறையாக ஆங் சான் சூகி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக நேரடியாக  முற்படுத்தப்பட்டுள்ளார்.

ஆங் சான் சூகியை அவரது வழக்கறிஞர்கள் அரை மணி நேரம் சந்தித்துப் பேசியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆங் சான் சூகி நல்ல உடல் நிலையுடன் இருப்பதாக சந்தித்துப் பேசிய  வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்