மாவோயிஸ்டுகளின் தாக்குதல் தகவலை அறிந்தவுடன், டெல்லிக்கு ஓடிய அமித் ஷா!! – தோழர் பாஸ்கர்

இந்தியாவின் நிழல் பிரதமராகவும், அதிகாரபூர்வ பிரதமராவதற்கு எத்தனிப்பவராகவும் இருக்கும் அமித் ஷா அஸாமில் சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் சென்ற சனியன்று(03/04/2021)இருந்தார்.

மத்திய இந்தியாவில் அமைந்துள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் இருபத்து நான்கு பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டதை முன்னிட்டு அமித் ஷா தேர்தல் பரப்புரையை பாதியிலேயே நிறுத்திவிட்டு டெல்லிக்கு பறந்தோடினார்.

அவர் மட்டும் அல்லாமல் அதே அசாமில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராய் இருப்பவரும் சத்தீஸ்கர் முதலமைச்சருமான பூபேஷ் பாகேலும் ஆளும் மாநிலத்துக்கு பறந்தோடினார் தான்.

unnamed 1 மாவோயிஸ்டுகளின் தாக்குதல் தகவலை அறிந்தவுடன், டெல்லிக்கு ஓடிய அமித் ஷா!! - தோழர் பாஸ்கர்

சென்ற ஏப். 2 அன்று அரசுத் தரப்பின் சிறப்பு அதிரடிப் படை(STF- Special Task Force), மாவட்ட ஊரகக் காவல்(DRG- District Rural Guard), சத்தீஸ்கர் போலீஸின் மாவட்டப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRPF), இதன் உயர்மட்ட CoBRA படை(Commando Battalion for Resolute Action) ஆகியவற்றை சேர்ந்த ஈராயிரம் படை வீரர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஜப்பூர் மாவட்டத்தில் ‘தேடுதல்  வேட்டையில்’ ஈடுபட்டதே ஆகும்.

ஈராயிரம் படை வீரர்கள் அனைத்து ஏற்பாடுகளுடன் இதில் ஈடுபட்டாலும் மக்கள் திரள்கள் பங்கேற்புடன் மணிக்கணக்கில் நடைபெற்ற மாவோயிஸ்டுகளின் இந்த எதிர் தாக்குதலில் ஈடு கொடுக்க முடியாமல் அடுத்த நாளில் இருபத்து நான்கு அரசுத் தரப்பு படை வீரர்கள் இறந்தனர்.

மாவோயிஸ்டுகளின் இத்தாக்குதலானது மூன்றாண்டுகளுக்குப் பின் நடைபெற்ற பெரிய சம்பவமான இதில் அரசுத் தரப்பில் இருபத்து நான்கு படை வீரர்கள் இறந்ததோடு முப்பதொன்று படை வீரர்கள் காயமடைந்தனர்.

கெரில்லா செயலுத்திகளில் அதிஉயர் பயிற்சி பெற்றிருந்தும் மேற்காண் CoBRA கமாண்டோக்கள் எழுவர் அரசுத் தரப்பில் உயிரிழந்தனர்.

இந்த CoBRA படையானது 2009ல் தொடங்கப்பட்டதிலிருந்து இத்துணை கமாண்டோக்களை இழந்தது இதுவே முதல் தடவை.

இதனால் மனத்திடம் குலைந்த இப்படை வீரர்கள் தமது சகாக்களின் இறந்த உடல்களை தம்முடன் கொண்டு செல்லாமல் தப்பியோடினர்.

unnamed 2 மாவோயிஸ்டுகளின் தாக்குதல் தகவலை அறிந்தவுடன், டெல்லிக்கு ஓடிய அமித் ஷா!! - தோழர் பாஸ்கர்

எனினும் இராகேஷ்வர் சிங் மான்ஹாஸ் எனும் CoBRA கமாண்டோ மாவோயிஸ்டுகளிடம் பிடிபட்டார்.

மாவோயிஸ்டுகள் நான்கு நாட்கள் கழித்து பழங்குடி ஆர்வலர்கள், இதழியலாளர்கள் போன்றோரிடம் மக்கள் திரள்கள் பலர் திரளாக கூடியிருந்த இடத்தில்தான்(மக்கள் மன்றம்) மேற்காண் கமாண்டோவை உயிரோடு ஒப்படைத்தனர்.

மாவோயிஸ்டுகளை பயங்கரவாதிகள் என்று அவதூறு கற்பிக்கப்படுவது உண்மை என்றால் இவ்வாறு செய்திருக்கமாட்டார்கள்.

அத்துடன் அவர்கள் வெளியிட்ட ஊடகச் செய்தி அறிக்கையில் படை வீரர்கள் தமக்கு எதிரி அல்ல எனவும் அரசாங்கத்தையே தாம் எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

மாவோயிஸ்டுகளின் தரப்பிலோ நால்வர்தான் இறந்தனர்.

மாவோயிஸ்டுகளின் மீதான இத்தாக்குதலுக்கு காரணமாக அவர்களின் உயர் மட்ட படைத் தலைவர் ஹித்மா சம்பவ இடத்தில் தமது படை வீரர்களுடன் இருந்ததே என்று அரசுத் தரப்பின் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின்(சிஆர்பிஎப்) தலைமை அதிகாரி குல்தீப் சிங் ஒரு தொலைக்காட்சி ஊடகத்திடம் தெரிவித்தார்.

இப்படை வீரர்கள் இத்தாக்குலுக்கு முன்பான தேடுதல் வேட்டையின்போது சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் வெறிச்சோடிக் கிடப்பதைக் கண்டபோது ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று ஊகித்தாலும் அதற்கு மேல் ஒன்றும் முடிவெடுக்கவில்லை.

அவர்கள் சுதாரிப்பதற்குள் மாவோயிஸ்டுகள் அவர்களை சுற்றிவளைத்து தாக்கி பேரிழப்பை ஏற்படுத்தி விட்டனர்.

அரசுத் தரப்பின் படை வீரர்கள் தாம் எப்போதும் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை(SoP- Standard of Procedure) கடைப்பிடிக்காததே இப்பேரிழப்பிற்கு காரணமாய் ஊடகங்களும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளும் குறிப்பிட்டாலும்

மக்கள் திரள்களின் பங்கேற்பு, சம்பந்தப்பட்ட நிலப்பரப்பின் நல்ல பரிச்சயம் மாவோயிஸ்டுகளுக்கு இருத்தல் போன்றவையே இதற்கு உண்மையான காரணமாகும்.

unnamed மாவோயிஸ்டுகளின் தாக்குதல் தகவலை அறிந்தவுடன், டெல்லிக்கு ஓடிய அமித் ஷா!! - தோழர் பாஸ்கர்

இந்தியாவின் ‘இரும்பு மனிதன்'(?) போல் தன்னை காட்டிக் கொண்டு அச்சுறுத்திவரும் அமித் ஷாவினுடைய அதிகாரத்தின் கீழ்தான் கொல்லப்பட்ட இப்படை வீரர்கள் வந்தாலும் இந்த உயிரிழப்பை தடுக்கமுடியாமல் அஸாமில் தேர்தல் பரப்புரையை பாதியில் நிறுத்திவிட்டு டெல்லிக்கு ஓடினார்.

மாவோயிஸ்டுகளை இறுதி வரை வேட்டையாடப் போவதாய் வீரவசனம் பேசுக் கொண்டிருக்கும்போதே அவரது CoBRA கமாண்டர் ஒருவர் (இராகேஷ்வர் சிங் மான்ஹாஸ்) மாவோயிஸ்டுகளின் பிடியில்தான் இருந்தார்.

அமித் ஷாவின் ஐஜி, CRPFன் சிறப்பு இயக்குநர், ஆலோகராகச் செயற்படும் முன்னாள் டிஜி(Director General) ஆகியோர் சம்பவ இடத்தில் மூன்று வாரங்களாய் முகாமிட்டுத்தான் அரசுத் தரப்பின் இத்தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வசமாய் சிக்கிக் கொண்டு அரசுப் படை வீரர்களின் பலி கொடுத்தனர்.

பகுதியின் நிலப்பரப்பை நன்கு அறிந்த உள்ளூர் வட்டார பழங்குடி மக்களின் சிலரை கொண்டும் சரணடைந்த சில மாவோயிஸ்டுகளையும் கொண்டு அமைக்கப்பட்ட படைகளின் பங்கேற்புடனேயே அரசுப் படையினர் இத்தேடுதல் வேட்டையில் ஈடுபட்டாலும் மக்கள் திரள் பங்கேற்புடன் மாவோயிஸ்டுகள் முறியடித்து அமித் ஷாவின் மூக்கை உடைத்தெறிந்தனர்.

அமித் ஷா ஒரு புறத்தில் மாவோயிஸ்டுகளை ஒழித்துவிடுவதாக வீரவசனம் பேசினாலும் இன்னொரு புறத்திலோ வேறு வழியின்றி அவர்களை பேச்சு வார்த்தைக்கும் அழைக்கின்றார்.

இந்துத்துவப் பாசிஸ்டு கும்பலின் தலைவரும் இந்தியாவின் நிழல் பிரதமரும் அடுத்த பிரதமராவதற்கு எத்தனிப்பவருமான அமித் ஷா இந்தியாவின் உள்துறை அமைச்சரான பின் நடைபெற்ற இத்தகைய முதல் சம்பவம் இதுவே.

இந்திய ஆட்சியாளர்களின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்துவதற்கு எழும் மக்கள் எதிர்ப்புகளை பாசிச ஆட்சியின் மூலம் எதிர்கொண்டுவிட முடியும் என்றே மோடி-அமித் ஷா கும்பல் கருதுகிறது.

இக்கும்பலின் இரண்டாம் ஆட்சியின்போதுதான் குடியுரிமை திருத்தச் சட்டம், மூன்று வேளாண் சட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிரான மக்கள் திரள்களின் மக்கள் திரள் வழியிலான எழுச்சிகள் இக்கும்பலின் முதல் ஆட்சியின்போது நடக்காதவை.

இன்னொரு புறத்தில் மேற்காண் கும்பல் தனது இரண்டாம் ஆட்சியின்போது மாவோயிஸ்டுகளை நாடெங்கும் வேட்டையாடி ஏராளமானோரை கொன்று சிறைப்படுத்தினாலும் அவர்களை ஒழிக்கமுடியவில்லை.

மாவோயிஸ்ட் கட்சி எனும் பெயரில் 2004 முதற்கொண்டு செயற்படத் தொடங்கி பதினேழு ஆண்டுகள் கழிந்து ஆட்சியாளர்களால் சுமார் ஐயாயிரம் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டு எண்ணற்றோர் சிறைப்பட்டாலும் அவர்களை ஒழிக்கமுடியவில்லை.

அதற்கும் ஆட்சியாளர்களே காரணம். அவர்கள் கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கையே அக்காரணம்.