04. இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் இன்றைய தினம் (02) தகனம் செய்யப்பட்டது
இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தமது 82ஆவது வயதில் கடந்த புதன் கிழமை (29) இரவு காலமானார்.
தலையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்குச் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் அவர் காலமானார்.
இந்தநிலையில் மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது பூதவுடல் வைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, இன்று காலை மாவிட்டபுரத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதி கிரியைகள் இடம்பெற்று, அதன் பின்னரான இரங்கல் உரையைத் தொடர்ந்து, தச்சங்காடு இந்து மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பினர் , மத குருமார்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், என பல்வேறு தரப்பினரும் இறுதி கிரியையில் கலந்து கொண்டனர்.



