Tamil News
Home செய்திகள் மாபெரும் போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் அழைப்பு

மாபெரும் போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினத்தில் மாபெரும் போராட்டத்திற்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் இன்று அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே  இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவி யோகராஜா கனகரஞ்சினி கூறுகையில், “எதிர்வரும் பெப்ரவரி 2ம் திகதி கறுப்பு பட்டி அணிந்து மாபெரும் அடையாள உணவு ஒறுப்பு போராட்டத்தை  ஆரம்பித்து பெப்ரவரி 6ம் திகதி வரை முன்னெடுக்கவுள்ளோம்.

அத்தோடு சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெறும் மாபெரும் நீதிப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கிறோம்” என்றார்.

Exit mobile version