‘மல்லிகை’ இதழ் ஆசிரியர் டொமினிக் ஜீவா காலமானார்.

ஈழத்தமிழ் எழுத்துலகில் செயற்பட்டுவந்த ‘மல்லிகை’ இதழ் ஆசிரியர் டொமினிக் ஜீவா தனது 94ஆவது வயதில் இன்று கொழும்பில் காலமானார்.

 யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டிருந்த டொமினிக் ஜீவா மல்லிகை இதழை நீண்டகாலமாக நடத்தி வந்துள்ளார்.

1940 முதல் எழுத்துலகில் இயங்கிவந்த அவர், ஈழ இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது.

1960 வெளிவந்த “தண்ணீரும் கண்ணீரும்”என்னும் இவரது சிறுகதைத் தொகுப்பே முதல் முதல் சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற நூலாகும்.

இவரது சிறுகதை நூல்கள் :

தண்ணீரும் கண்ணீரும். (60)

பாதுகை (62)

சாலையின் திருப்பம் (67)

வாழ்வின் தரிசனங்கள் (2010)

டொமினிக் ஜீவாசிறுகதைகள்.

இவர் தன்னைப்பற்றிய ஒரு சுயவரலாற்று நூலையும் எழுதி இருக்கிறார்.
அதன் பெயர் ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’.’ இந் நூல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதே போல் சிங்களம் உள்ளிட்ட பல மொழிகளில் இவரது சிறுகதைகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.