மலையகம் இல்லை ஆனால் கொழும்பு,கம்பகா இருக்கலாம்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மலையகத்தில் போட்டியிடாது என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தன்னிடம் உறுதியளித்துள்ளார் என, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 10ஆவது ஆண்டு நினைவுப் பேருரை, நேற்று (01), மாலை, ஹட்டனிலுள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பொதுத் தேர்தலில் மலையகத்தில் போட்டியிடாது என கூட்டணியின் முக்கிய உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, தன்னிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்ததாகவும் கொழும்பு, கம்பகா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவது பற்றியே பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் இந்தத் தேர்தலில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் எனவும் இது தொடர்பாக அனைவரும் கலந்து பேசித் தீர்மானிக்கலாம் என்றும், மாவை எம்.பி தனக்குத் தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.

RECOMMENDED