Tamil News
Home உலகச் செய்திகள் மலேசியாவில் மியான்மர் கப்பல்கள்: தஞ்சம் கோரியவர்கள் நாடுகடத்தப்படக்கூடும் என அச்சம்

மலேசியாவில் மியான்மர் கப்பல்கள்: தஞ்சம் கோரியவர்கள் நாடுகடத்தப்படக்கூடும் என அச்சம்

மலேசிய குடிவரவுத் தடுப்பு முகாம்களில் உள்ள சுமார் 1,200 மியான்மரிகளை நாடுகடத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இவர்களை திரும்ப அழைத்துக் கொள்வதற்காக மியான்மர் கடற்படையின் கப்பல்கள் மலேசியாவுக்கு சென்றடைந்துள்ளதாகத தகவல் வெளியாகியுள்ளது.

மலேசியாவில் தஞ்சமடைந்த மியான்மர் அகதிகளில் பெருமளவிலானோர் ரோஹிங்கியாக்களாக உள்ள நிலையில், ஐ.நா. அகதிகள் முகமையிடம் பதிவு செய்த ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்த மாட்டோம் என மலேசிய தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டுக்கு மேலாக குடிவரவுத் தடுப்பில் உள்ளவர்களை சந்திக்க ஐ.நா. தரப்பு அனுமதிக்கப்படாத நிலையில், இத்தடுப்பில் உள்ள பல தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு ஐ.நா. அகதிகள் முகமையிடம் பதிவுச் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், பதிவுச் செய்யப்பட்டாத தஞ்சக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படக்கூடும் என்ற அச்சம் மேலெழுந்துள்ளது.

இந்நிலையில்,கப் லிங் சங் எனும் மியான்மர் அகதி மலேசியாவில் தற்போது வாழ்ந்து வருகிறார். மியான்மரில் ஏற்பட்டுள்ள இராணுவ ஆட்சி பிற அகதிகளைப் போல அவரையும் அச்சம் கொள்ள செய்திருக்கிறது.

“எனது பெற்றோர்கள், மற்றும் பாட்டி மியான்மரில் தான் இருக்கின்றனர். அவர்கள் தொடர்புக்கொண்ட பொழுது, பாதுகாப்பாக இருக்கிறார்களா என்றே முதலில் கேட்டேன்,” என்கிறார்.

“எனது குடுமப்த்துடனான தொடர்பை இழக்கும் போதெல்லாம், அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பார்களோ என்ற அச்சம் எழுகிறது. எனது நிம்மதியை இழந்திருக்கிறேன்,” என அவர் அவர் தெரிவித்திருக்கிறார்.

மியான்மரில் இணையப் பயன்பாட்டுக்கு விதிக்கப்படும் தடை, அவரது குடும்பத்தினருடன் தொடர்புக் கொள்ள முடியாத சூழலை லிங் சங்-க்கு ஏற்படுத்துகின்றது.

Exit mobile version