Tamil News
Home செய்திகள் மலேசியாவில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான வழக்கு கோலாம்பூர் நீதிமன்றிற்கு மாற்றம்

மலேசியாவில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான வழக்கு கோலாம்பூர் நீதிமன்றிற்கு மாற்றம்

விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான தரவுகளை தனது கைபேசியில் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட மலாக்கா அரசு சார்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.சந்துருவின் வழக்கானது கோலாலம்பூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் குற்றங்கள் தொடர்பான சட்டம் 2012, பிரிவு 13இன்கீழ் எல்லாக் குற்ற நடவடிக்கைகளும் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என துணை அரசாங்க வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.  ஆனால் சந்தேக நபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மெல்வின் டே, தமது கட்சிக்காரர் மீதான வழக்கு ஒன்று மலாக்கா அமர்வு நீதிமன்றில் இருப்பதால், விடுதலைப் புலிகள் மீதான இந்த வழக்கும் அங்கேயே விசாரிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.

இருந்தும் நீதிபதி அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன், வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றியதாகவும் அறிய முடிகின்றது.

Exit mobile version