மரணத்தில் பூத்த மலையகம் – மலையக மக்களின் 200 ஆண்டுகால வரலாற்றை குறிக்கும் நிகழ்வு நாளை யாழில்

மலையக மக்களின் வரலாற்றை பறைசாற்றும்  வகையில் மரணத்தில் பூத்த  மலையகம் எனும் மலையக மக்களின் 200 வருடங்களை குறிக்கும் நிகழ்வு நாளை சனிக்கிழமை 27 ம் திகதி காலை 9.30 மணிக்கு யாழ்வீரசிங்க மண்டபத்தில்  இடம்பெறவுள்ளது.

மரணத்தில் பூத்த மலையகம் - மலையக மக்களின் 200 ஆண்டுகால வரலாற்றை குறிக்கும்  நிகழ்வு நாளை யாழில் | Virakesari.lk

கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் என் இன்பம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பெருந்தோட்டைதுறை மக்கள் குரல் அமைப்பின் இயக்குநர்  அன்ரனி ஜேசுதாசன் மலையக மக்களின் மாண்பினை பாதுகாக்கும் அமைப்பின் அருட்பணி சக்திவேல் அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான யோதிலிங்கம் அகில இலங்கை தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் யாழ்மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் முரளீதரன் யாழ்பல்கலைகழக ஓய்வுநிலைப்பேராசிரியர் கலாநிதி சூசை சிலுவைதாசன் யாழ்பல்கலைகழக ஊழியர் உபசங்கதலைவர் யசோதரன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன்திலீசன் புதியஅதிபர்கள் சங்கத்தின் செயலாளா சிவசுப்பிரமணியம் நேதாஜி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர்ஹர்மன் குமார மலையதோட்டத்தொழிலாளிகளான திருமதி சலாட் சதாசிவம் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

மேற்படி நிகழ்வில் மலையகதொழிலாளர் கௌரவிப்பதற்கான நிகழ்வும் நாடகம் மற்றும் கலைநிகழ்வுகளும் நடைபெறும்.