‘மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன்’ – அசேல சம்பத்

மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன் என   இலங்கை குற்றப் புலனாய்வாளர்களினால் கைதுசெய்யப்பட்டு   விடுதலை செய்யப்பட்ட சிவில் உரிமை செயற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“வாழ்க்கையில் முதல் முறையாக நான் மரண பயணத்தை அனுபவித்தேன்.நான் மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன்.வீட்டிலிருந்தவேளை எனது வாயை பொத்தி இழுத்துச்சென்றார்கள் – எனது மூத்த மகன் அதனை பார்த்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் எனது அயல்வீட்டில் உள்ளன. நான் வீட்டியே இருந்தேன்,நான் இந்த நாட்டின் பிரஜை. அதிகாரிகள் சீருடையின்றி உரிய காரணம் கூறாமல்  இழுத்துச்சென்றனர்.

பத்துபேருக்கு மேல் வந்திருந்தனர், எனது கையில் ஏற்பட்ட காயங்களை பாருங்கள்,எனது விரலில் ஏற்பட்ட காயங்களை பாருங்கள், இந்த சாரத்துடன் தான் என்னை கொழும்பிற்கு அழைத்துச் சென்றார்கள்.ரீசாத் பதியுதீன் எனக்கு   ரீசேர்ட்டை தந்தார். பொடி லசி எனக்கு குளிப்பதற்கான சவர்க்காரத்தை தந்தார். சமூக ஊடகங்களில் உடனடியாக நான் கடத்தப்பட்ட தகவல் வெளியாகாவிட்டால் என்னை கொலை செய்திருப்பார்கள்” என்றார்.

201452175 1885235718325266 1129622561865677654 n.jpg? nc cat=106&ccb=1 3& nc sid=730e14& nc ohc=ckjJ9HXGavYAX8Xmv1S& nc ht=scontent.fcmb4 1 'மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன்' - அசேல சம்பத்

இதேவேளை அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.

நன்றி – தினக்குரல்