Tamil News
Home செய்திகள் மனித உரிமைகள் விவகாரம் – இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் அமெரிக்க தூதுவர் பேச்சு

மனித உரிமைகள் விவகாரம் – இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் அமெரிக்க தூதுவர் பேச்சு

மனித உரிமைகள் விவகாரம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் அமெரிக்காவும் இலங்கையும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரிப்லிட்ஸ், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவைச் சந்தித்து இவை தொடர்பில் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்க்கள் தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின்போது ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

‘இலங்கையின் மனித உரிமைகள் நிலை, நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகள், பயங்கரவாதத்தக்கு எதிராகவும், சர்வதேச ரீதியான குற்றச்செயல்கள் போனறவற்றுக்கு எதிராகவும் ஒத்துழைத்துச் செயற்படுவது மற்றும் இலங்கையில் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நேற்று இடம்பெற்றது.

அமெரிக்காவி ஜோ பிடன் நிர்வாகம் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்களில் அழுத்தம் கொடுக்கும் என அமெரிக்கத் தூதுவர் கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீண்டும் இணைந்து கொள்ளுமா என்பதையிட்டு இப்போது சொல்லமுடியாது எனவும் தெரிவித்த அமெரிக்கத் தூதுவர், இருந்தாலும் இலங்கையில் உண்மையான சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்கா ஏனைய நாடுகளுடன் இணைந்து அழுத்தம் கொடுக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

Exit mobile version