மனித உரிமைகள் ஆணையாளரை சிறிலங்காவுக்கு அழைக்க அரசு ஆலோசனை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்சலெட்டை சிறிலங்காவுக்கு அழைப்பது குறித்து அரசாங்கம் ஆலோசனை நடத்திவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா குறித்து மனித உரிமைகள் பேரவையில் கடுமையான அறிக்கை ஒன்றை ஆணையாளர் வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கை வெளிவந்த பின்னரே சிறிலங்கா அரசு உயர் மட்டத்தில் இது தொடர்பில் ஆராய்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா நிலைமைகளை நேரில் வந்து ஆராயுமாறு அவரை அழைப்பதற்கு அரச தரப்பு ஆலோசனை நடத்திவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆணையாளருக்கு அழைப்பு விடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுவதை உறுதிப்படுத்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே, இருந்த போதிலும் இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படுமானால், அதனை அவர் ஏற்றுக்கொள்வார் எனவும், தற்போதைய ஜெனிவா கூட்டத் தொடர் முடிவுக்கு வந்த பின்னர் இதற்கான அழைப்பு விடுக்கப்படலாம் எனவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.