மனித உரிமைகளை மதிப்பதில் தான் சிறீலங்காவின் எதிர்காலம் தங்கியுள்ளது – அமெரிக்கா

சிறீலங்காவில் உள்ள மத மற்றும் இன ரீதியான சிறுபான்மை மக்களை சிறீலங்கா அரசு பாதுகாக்க வேண்டும். மனித உரிமைகளை மதிப்பதில் தான் சிறீலங்காவின் பாதுகாப்பும் அதன் எதிர்காலமும் தங்கியுள்ளது என அமெரிக்காவின் கொள்கைகளுக்கான பிரதிப் பேச்சாளர் ஜலீனா போட்டர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் தீர்மானத்திற்கு அமெரிக்கா ஆதரவு வழங்கியுள்ளது. சிறீலங்காவில் உள்ள சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புக்களின் பாதுகாப்பு, பொது அமைப்புக்களின் பாதுகாப்பு மற்றும் எல்லா மக்களுக்கும் சமத்துவமான நீதி என்பவற்றை இந்த தீர்மானம் உறுதி செய்கின்றது.

சிறீலங்காவின் மனித உரிமை விவகாரங்களை கண்காணிக்கவும், சாட்சியங்களை சேகரித்து பாதுகாத்து அதற்கான நீதி கோரலை முன்னெடுக்கவும் இந்த தீர்மானம் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

எனவே மனித உரிமைகளை மதிப்பதில் தான் சிறீலங்காவின் பாதுகாப்பும் அதன் எதிர்காலமும் தங்கியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.