மனித உயிர்களைப் பாதிக்கும் அவுஸ்திரேலியாவின் அகதிகள் கையாளும் போக்கு

கடந்த பல ஆண்டுகளாக அகதிகள் தொடர்பாக கடுமையானப் போக்கை கையாளும் அவுஸ்திரேலிய அரசு, வரும் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களுக்கும் கடல் கடந்த் தடுப்பு முகாம்களுக்கும் 2 பில்லியன் டாலர்கள் செலவுச் செய்ய அவுஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முகாம்களில் தஞ்சமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர்.

அவுஸ்திரேலியாவின் இந்த போக்கு பெரும் செலவுகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் பல மனித உயிர்களை பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. அத்துடன் அவுஸ்திரேலியா மீதான உலக நன்மதிப்பை இது சீரழிக்கும் விதத்தில் அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.