Tamil News
Home உலகச் செய்திகள் மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கும் புதிய அமினோ அமிலம்

மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கும் புதிய அமினோ அமிலம்

மீன் மற்றும் இறைச்சி வகைகளில் காணப்படும் taurine எனப்படும் அமினோ அமிலம் மனிதர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்க உதவுவதுடன் அவர்களை இளைமையாகவும் வைத்திருக்க உதவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எலிகள் மற்றும் குரங்குகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மிருகங்களின் ஆயுட்காலம் 12 விகிதத்தால் அதிகரித்து இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மனிதர்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், மனிதர்களின் வாழ்நாளை அதிகரிப்பதுடன், அவர்களை உடல்நலத்துடனும் வாழ வைக்கலாம் என கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்த ஆய்வு குழுவின் தலைவர் பேராசிரியர் விஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வின் முடிவுகள் the journal Science என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அமினோ அமிலம் முட்டை, இறைச்சி மற்றும் மீன்களில் காணப்படுகின்றது. அது மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி, நரம்பு மண்டலம் மற்றும் சக்தி உற்பத்தி ஆகியவற்றை பலப்படுத்துகின்றது.

சில குளிர்பானங்களில் இந்த அமினோ அமிலம் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது. மனவலு மற்றும் உடல்வலுவை அதிகரிக்கும் நோக்கத்துடன் அது சேர்க்கபட்டிருந்தது. இந்த அமினோ அமிலத்தின் குறைபாடே வயதான தோற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகின்றபோதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்கிறரர் பேராசிரியர் யாதவ்.

Exit mobile version