“மண்வளமே எம்வளம் என போற்றிய விடுதலைப்போர்” – பரணி கிருஸ்ணரஜனி

“இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.” என்று தேசியத் தலைவர் தான் போராட்டம் ஆரம்பித்த காலத்திலேயே அறிவித்தது நாம் அறிந்ததே.. அவர் முதல் கொடுத்த முக்கியத்துவம் இயற்கைக்கும் சுற்றுசூழலுக்கும்தான் என்பதற்கு இது ஒரு வரலாற்று ஆதாரம்.

புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் மன்னார், புல்மோட்டை, காங்கேசன்துறை, உடபட பல தாயக பிரதேசங்களில் இயற்கைக்கு மாறாக, இயற்கை வளங்களை கபளீகரம் செய்யும் நோக்கில் ஜப்பான் உட்பட பல நாடுகள் வியாபார ஒப்பந்தம் எழுத வந்தபோது மறுபேச்சுக்கிடமின்றி அதை தலைவர் நிராகரித்தது பலருக்கு தெரியாது.

சீன, இந்திய கப்பல்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியதன் மூலம் புல்மோட்டை இல்மனைட் கனிம வளைத்திருட்டை தடுத்தும் வந்திருந்தார்.

ஒருவேளை மண்ணுக்கு, இயற்கைக்கு குந்தகம் விளைவிக்கும் அந்த ஒப்பந்தங்களில் தலைவர் பிரபாகரன் கையெழுத்திட்டிருந்தால் மேற்குலகத்தின் பார்வையில் அவர் “பயங்கரவாதி” இல்லாமல் போயிருக்கலாம்..
இதைத்தான் இன்றைய நமது ஆய்வாளர்கள், “பிரபாகரனின் தவறு” என்று வாந்தி எடுக்கிறார்கள். இனத்தை மட்டுமல்ல, இயற்கையையும் மாற்றானிடம் அடைவு வைக்க முடியாது.

இது பேராட்டத்திற்கு மட்டுமல்ல மனித வாழ்வின் இருப்பிற்கே முரணானது. தலைவர் இப்படியெல்லாம் சிந்தித்தன் விளைவுதான், “ஒரு சிறிய இனத்தின் தலைவன் உலக முதலாளித்துவத்திற்கே வேட்டு வைக்கிறானே..” என்று ஒட்டு மொத்த உலகமும் சேர்ந்து போராட்டத்தை அழித்து முடித்தது. தமிழீழத்தின் வாழ்வு, அடையாளம், குறியீடாக இருப்பது தாயகத்தை சுற்றியுள்ள கடலும் தாயகத்தினுள் நிமிர்ந்து நிற்கும் பனைகளும்தான்.tamil eelam defacto state 6 "மண்வளமே எம்வளம் என போற்றிய விடுதலைப்போர்" - பரணி கிருஸ்ணரஜனி

இந்த பனைகளத்தான் ஆரம்ப காலத்தில் பதுங்கு குழிகள் அமைக்க புலிகள் மட்டுமல்ல மக்களும் பாவித்தார்கள். ஒரு பனை தறிக்கப்படுவதென்பது ஒரு தமிழனின் வாழ்வாதாரம் நசுக்கப்டுவதற்கொப்பானது என்பதை தலைவர் உணர்ந்து அதை மட்டுப்படுத்தியதோடு மட்டுமல்ல தறிக்கப்பட்ட பனைகளுக்கும் மேலாக தமிழர் தாயகமெங்கும் பனங்கன்றுகளை நட உத்தரவிட்டார். தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியது.

இந்திய இராணுவ முற்றுகை உட்பட அதற்கு பின்னான பல சிங்களப் படையெடுப்பு காலங்களிலும் போராளிகள் வடதமிழீழத்திற்கும் தென் தமிழீழத்திற்கும் இலகுவாக சென்று வரவும் தமது காப்பரண்களை பாதுகாப்பாக அமைத்து கொள்ளவும் வனப்பகுதிக்கும் அங்கு வாழும் வன உயிர்களுக்கும் சேதம் வினைவிப்பதை அறிந்த தலைவர் போராளிகளிடம் ” நீங்கள் பாதையை மாற்றியமையுங்கள், அல்லது எதிரியின் முற்றுகையை உடைத்து போய் வாருங்கள், எந்த காரணம் கொண்டும் வனவளத்தை அழிக்க கூடாது” என்று இறுக்கமாக கட்டளையிட்டதும் பலருக்கு தெரியாது. காடழிப்பு தடுப்பு மற்றும் பனைவள பேணலுடன்,மர நடுகைமூலமும் மண்வளம் பேணியமையையும் நாம் மறந்துவிடலாகாது.

photo15 "மண்வளமே எம்வளம் என போற்றிய விடுதலைப்போர்" - பரணி கிருஸ்ணரஜனி
National Leader Hon. Velupillai Prabakaran

இதன் விளைவாக போராளிகள் பெரும் ஆயுத தளபாட சுமைகளுடன் நீண்டதூரம் நடந்து பயணிக்க வேண்டியிருந்தது மட்டுமல்ல பல தருணங்களில் எதிரிகளை நேரடியாக சந்தித்து மோதி களப்பலியாக வேண்டியும் ஏற்பட்டது.

இன அழிப்பு நோக்கங்களுடன் பேரழிவு ஆயுதங்களுடன் படையெடுத்து தமிழர் தேசத்தை சுற்றி நின்ற சிங்களத்தை எதிர்கொண்டபடியே இயற்கையையும் சுற்றுச்சூழலையும் புலிகள் நேசித்த, பாதுகாத்த கதை இது.
ஆனால் 2009 இற்கு பிறகு இன்று கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் ஒரு பகுதியாக சிங்களத்தால் தமிழீழத்தின் இயற்கையும் சுற்றுச்சூழலும் தாறுமாறாகக் குறி வைக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.

சிறீலங்கா இராணுவம் விடுதலை புலிகளால் வளர்க்கப்பட்ட காடுகளை அழித்து வருவதுடன், மணல் கொள்ளையிலும் ஈடுபட்டு வருகின்றது. இச்செயல்கள் தான் இன்றைய வெள்ளப்பெருக்கிற்கும் அழிவிற்கும் காரணமாக அமைந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

டிசம்பர் 5ம் திகதி உலக மண்வள தினம் –