மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாழும் 15,000 குடும்பங்கள் -தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

இலங்கையில் 15,000 குடும்பங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயமுள்ள பகுதிகளில் வசிப்பதாக அடையாளம் காணப் பட்டுள்ளன என்று ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும்  அந்த ஆபத்தான பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேற்ற முடியவில்லை என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த குடும்பங்களைப் பாதுகாத்து அபாயமுள்ள பகுதிகளில் இருந்து வெளியேற்றி வீடுகள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், கொரோனா பரவல் காரணமாக அந்த திட்டம் செயல்படுத்த முடியாமல் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கண்டி, நுவரெலியா, மாத்தறை, மாத்தளை மற்றும் கேகாலை உட்பட 10 மாவட்டங்களில் தள ஆய்வு மேற்கொண்டு அவற்றை அதிக அபாயம் நிலவும் மாவட்டங்களாக அறிவித்துள்ளது. அதிலும் கண்டி மாவட்டமானது அதிகூடிய ஆபத்துள்ள மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.