மட்டக்களப்பில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நடத்தப்பட்ட போராட்டம்

வலிந்து காணாமலாக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஆகஸ்ட் 30 ஜ  முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட உறவுகள், அரசியல் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்கள் என பெருமளவானவர்கள் கலந்துகொண்டனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் உறுப்பினர்களும் இதில் பங்கெடுத்திருந்தனர்.

miss batti 2022 4 மட்டக்களப்பில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நடத்தப்பட்ட போராட்டம்வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரின் போது இலங்கை படையினராலும், அதனுடன் இணைந்து செயற்பட்ட துணை இராணுவக்குழுவினராலும் ஏறத்தாள 146679 பேர் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் 2000 இற்கு மேற்பட்ட நாளாக தொடரும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக ஆதரவு வழங்கப்படும் எனவும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.