மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற கிறிஸ்மஸ் ஆராதனைகள்

ஜேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு இன்று நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றியவாறு கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன.

IMG 3106 மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற கிறிஸ்மஸ் ஆராதனைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் வழிபாடுகள் மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சமூக இடைவெளிகளை பேணியவாறு பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.

IMG 3004 மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற கிறிஸ்மஸ் ஆராதனைகள்

மரியால் பேராலயத்தில் பேராயர் ஜோசப்பொன்னையா ஆண்டகை தலைமையில் இதன்போது விசேட ஆராதனைகள் நடைபெற்றன.

இதன்போது ஜேசு பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு கொட்டில் திறக்கப்பட்டு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றதுடன் கரோல் கீதங்களும் பாடப்பட்டன.

IMG 3017 மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற கிறிஸ்மஸ் ஆராதனைகள்

இதன்போது கொரோனா அச்சுறுத்தலில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கவும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து விரைவில் மீளவும் நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சி நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.

IMG 3131 மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற கிறிஸ்மஸ் ஆராதனைகள்

2005ஆம் ஆண்ட முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் இந்த தேவாலயத்தில் வைத்து ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டமையும் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்மஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்பினை வழங்கியிருந்தனர்.