மட்டக்களப்பில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவு தினம்

இலங்கை தமிழர்களின் மூத்த தமிழ் அரசியல் தலைவராகவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகருமான தந்தை செல்வாவின் நினைவு தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில கிழக்கு மாகாணம் ரீதியில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு ஊறணி,யோவான் பொதுமண்டபத்தில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் தலைவரும் தந்தை செல்வாவின் பேரணுமான ச.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான துறையின் பேராசிரியர் வேலுப்பிள்ளை குணரத்தினம்,தென் கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா ஆகியோர் சிறப்பு பேச்சாளர்களாக கலந்துகொண்டனர்.

இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.

IMG 3617 மட்டக்களப்பில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவு தினம்மாவட்ட,மாகாண மட்டங்களில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் இதன்போது சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் வெற்றிபெற்ற மாணவர்களின் பல்வேறு பேச்சுகளும் இதன்போது நடைபெற்றதுடன் மாணவர்களினால் வரையப்பட்ட தந்தை செல்வாவின் ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதன்போது மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்ததையொட்டி அதன் வலய கல்வி பணிப்பாளர் சிறிதரன் இதன்போது கௌரவிக்கப்பட்டார்.