மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் ஹைரோ காபன் திட்டம்-கல்யாணி 

இந்திய மத்திய அரசானது மாநில அரசு, மற்றும் மாநில மக்களின் அனுமதிகளைப் பெறாது தனது வர்த்தக நோக்கத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது வழக்கம். மக்களின் ஆலோசனைகளோ மாநில அரசுகளின் ஆலோசனைகளோ இங்கு மதிக்கப்படுவதில்லை. இதனால் மக்கள் மத்திய அரசிற்கு எதிராக பல விடயங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது உலகறிந்த விடயமாகும். அதே வகையில், தற்போது ஹைரோகாபன் திட்டம் தொடர்பாக மீண்டும் தனது வேலைகளை மத்திய அரசு ஆரம்பித்துள்ளதைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்தியா பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் 80 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதேபோல 45 சதவீத எரிவாயுவையும் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறார்கள். இதற்காக பெருமளவு பணத்தை செலவு செய்ய வேண்டியது உள்ளது. மேலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே எரிபொருள் கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது. எனவே இந்தியாவிலேயே எரிபொருள் உற்பத்தி செய்ய வேண்டிய தேவை இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது.

மக்களின் எதிர்ப்பையும் மீறி இந்த ஹைரோகாபன் திட்டத்தை அரசு முன்னெடுப்பதால், ஹைட்ரோ கார்பனின் உற்பத்தி, அதன் பயன்பாடு மற்றும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஹைரோகாபன் என்றால் என்ன? அவை கிடைக்கும் இடங்கள்

ஹைட்ரோ காபன் என்பது ஐதரசன் வாயு மற்றும் காபன் வாயுக்களின் சேர்க்கையாகும். இந்த ஹைட்ரோ காபன் வாயு ஒட்சிசன் உதவியுடன் எரி பொருளாக மாற்றி பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, போன்ற அனைத்துமே ஹைரோ காபனின் வடிவங்களே. நாட்டின் எரிபொருள் தேவையைத்  தீர்ப்பதும் ஹைரோ காபனே.

பெரும்பாலான ஐதரோ காபன்கள் இயற்கையில் பூமியில் இருந்தே கிடைக்கின்றன. பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை வளி ஆகியன சிதைவுற்று வெளிப்படுத்தும் அதிக அளவிலான காபன் மற்றும் ஐதரசன் அணுக்கள் பிணைந்து மேற்படி சேர்வைகளைத் தருகின்றன.

புதுச்சேரி முதல் மன்னார் வளைகுடா வரை உள்ள நிலப் பகுதியில் 25 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவும்,  கடலில் சுமார் 30 ஆயிரம் கிலோ மீற்றர் பரப்பளவும் கொண்ட காவிரிப் படுகை பகுதியே இந்தியாவில் பூமிக்கு அடியில் அதிகப்படியான எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயுவும் உள்ள பகுதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இங்கேயே ஹைரோ காபன் கிணறுகள் தோண்டப்படவுள்ளதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் தொடர்ந்து எண்ணெயும் இயற்கை எரிவாயுவும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காவிரி டெல்டா உள்ளடக்கிய காவிரிப் படுகை முழுவதிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு செய்ததுடன்  இதற்கான பணிகளை   ஆரம்பித்துள்ளது. அத்துடன் மத்திய அரசு யாரும் எதிர்பாராத வகையில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது

ஹைரோ காபன் அகழ்வில் ஸ்ரெர்லைட் கம்பனியின் பங்கு

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டே மத்திய பெட்ரோலியம் அமைச்சகத்துடன் இணைந்து ஹைட்ரோ காபன் கிணறுகளைத் தோண்ட அனுமதி பெற்று விட்டது. இதன் முதல் கட்டப் பணியாக ஹைட்ரோ காபன் கிணறுகளை அமைக்க எவ்வளவு செலவாகும்? எவ்வளவு நாட்களாகும்? பூமிக்குள் செலுத்தப்படும் வேதிப்பொருட்களை பாதுகாப்பது எவ்வாறு? கழிவுப் பொருட்களை அகற்றுவது எவ்வாறு? என்பது பற்றி ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது

 

இந்த திட்டத்தால் ஏற்படும் தீமைகள்

ஹைரோ காபன் எடுப்பதற்காக 1000 மீற்றரில் இருந்து 3000 மீற்றர் வரை ஆழ்துழைக் கிணறு தோண்டப்படும். இவ்வாறு தோண்டும் போது, அங்கு தேங்கியிருக்கும் ஹைரோகாபன் வாயுக்கள் வெளியேறத் தொடங்கும். அந்த இடைவெளியில் நிலத்தடி நீர் சென்று நிரப்பிக் கொள்ளும். இதனால் நிலப்பகுதிகள் எல்லாம் விவசாயம் செய்ய முடியாத நிலைக்குக் கொண்டு வரப்படும். அத்துடன் ஹைரோ காபன் கிணறுகளிலிருந்து பலவிதமான நச்சு வாயுக்கள் வெளியேறும். அத்துடன் வெளியாகும் கழிவுகள் சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்கும். இதனால் உயிரினங்கள், மற்றும் தாவரங்கள் அழிந்து இயற்கையும் நாசமாகி விடும். இந்த நிலையில் காரைக்கால், புதுச்சேரி பாகூர் பகுதியில் தண்ணீரை அதிக அளவில் உறிஞ்சும் சமயத்தில் கடல்நீர் அதிக அளவில் உள்புகுந்து, நல்ல நீர் உப்புநீராக மாறும் அபாயம் ஏற்படும்

தற்போது நிலத்தடி நீர் பூமிக்கு கீழே 100 மீற்றரில் இருந்து 400 மீற்றர் ஆழம் வரையிலுமே உள்ளது. ஹைரோகாபன் எடுப்பதற்காக 1000 மீற்றர் வரையில் துளையிடும் போது நிலத்தடி நீர் அந்த இடத்தை நிரப்புவதற்கு கீழே சென்று விடும். அத்துடன் ஹைரோ காபன் எடுக்கும் கிணறுகளிலிருந்து அதிகளவான நீர் வெளியேற்றப்படும். இதனால் விவசாயம், குடிநீர் போன்ற தேவைகளுக்கு நிலத்தடி நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு அந்தப் பகுதி விவசாயத்திற்கு ஏற்றதாக இல்லாமல் வறண்ட பூமியாக மாறிவிடும்.625.0.560.350.160.300.053.800.668.160.90 மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் ஹைரோ காபன் திட்டம்-கல்யாணி 

காவிரிப் படுகையின் பூமி சல்லடையாக துளைக்கப்படும் பட்சத்தில் நில நடுக்கம் அபாயம் அதிகரிக்கும். இந்த திட்டத்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால் ஹைட்ரோ காபன் கிணறுகளில் பணி புரிய லட்சக்கணக்கான வட மாநிலத்தவர்கள் தமிழ் நாட்டில் குடியேற வாய்ப்புள்ளது. இது தமிழர்களின் கலாச்சாரத்தை உடைக்கும் வகையில் மாறும்.

இதனாலேயே இந்தத் திட்டத்தை மக்கள் எதிர்க்கின்றனர். இதற்காகவே போராட்டங்களை மேற்கொள்கின்றனர்.

மக்களின் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் என்னுமிடத்தில் 2006-ம் ஆண்டு பூமிக்கடியில் துளையிடப்பட்டது. இதனால் 21 லட்சம் ஏக்கர் நிலம் உபரி நிலமாக மாறி விடும் என்பது கண்டு பிடிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை அடக்கிய படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 13பேர் கொல்லப்பட்டனர். பலபேர் காயமடைந்தனர். இதனையடுத்து விருப்பம் இன்றி அந்த இடத்தில் அப்பணிகள் நடைபெறாது என்று தமிழக அரசு உயரதிகாரிகளும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உறுதி அளித்தனர் இந்தத் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. 174 நாட்களாக மக்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. ஆனால் தற்போது அந்தத் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் ஒட்டு மொத்த வாழ்வாரத்தையே இந்த திட்டம் அழித்து விடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே காவிரிப் படுகையில் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.02 1506934822 pudukottaiprotestneduvasal234 மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் ஹைரோ காபன் திட்டம்-கல்யாணி 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கண்டித்து தமிழகம், புதுவையில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. புதுவையில் சமீபத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார்.  அவர் பேசும்போது, எக்காரணத்தை கொண்டும் மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும்,  சட்டசபை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறியிருந்தார். அத்துடன் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்த, தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் மூடப்பட்டது.

தங்கள் ஸடெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை போராட்டத்துக்குத் தூண்டியதும், அவர்களுக்கு நிதியுதவி வழங்குவதும், சீன நிறுவனம்தான் என வேதாந்தா நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது

மத்திய அரசின் இந்த அறிவிப்பு மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாகும். மக்களின் கருத்துக்களை கேட்கவில்லை. மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறவில்லை. எதேச்சதிகார நோக்கத்தோடு மத்திய அரசானது இந்த திட்டத்தை தனியார் நிறுவனத்துக்குக் கொடுத்து அவர்கள் அதை நடைமுறைப்படுத்துவற்கு நாங்ளே அனுமதி அளிக்கிறோம் என்று கூறியிருப்பது மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கைக் காட்டுகிறது.

மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஹைரோ காபன் திட்டப் பணிகள் தொடங்கப்படாமல் தாமதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது இதற்கு சுற்றுச் சூழல் துறையின் ஒப்புதல் பெறத் தேவையில்லை என்ற புதிய நிலைப்பாட்டின் மூலம் மத்திய அரசு மக்கள் மீது போர் தொடுத்திருக்கின்றது.

சுமார் 60 இலட்சம் மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து அவர்களை அகதிகளாக மாற்றும் இந்த நாசகார திட்டத்தை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். மக்களே களத்தில் இறங்கி புரட்சிகர போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

.