Tamil News
Home செய்திகள் மகிந்த ராஜபக்ஸ – நரேந்திர மோடி இணையவழி ஆலோசனை

மகிந்த ராஜபக்ஸ – நரேந்திர மோடி இணையவழி ஆலோசனை

சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்வரும் 26ஆம் திகதி இணையவழியில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின்னரும், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் நீண்ட காலமாக நீடித்து வரும் நட்புறவின் பின்னணியிலும் நடக்கும் இந்த மாநாடு, இருதரப்பு உறவுகளுக்கான விரிவான செயற்திட்டத்தை ஆராயும் வாய்ப்பை இரு தலைவர்களுக்கும் வழங்கியிருக்கிறது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் ருவிற்றர் பதிவு ஒன்றுக்கு பதிலளித்த இந்தியப் பிரதமர் மோடி, இருதரப்பு நட்புறவை விரிவாக ஆய்வு செய்ய தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும் கொரோனா காலத்திற்கு பின்னரான காலத்தில் நமது கூட்டுறவை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளை நாம் ஆராய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Exit mobile version