Home செய்திகள் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரிலான ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துங்கள் – ஆளுநா் அலுவலகம் முன் போராட்டம்

மகாவலி அபிவிருத்தி என்ற பெயரிலான ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துங்கள் – ஆளுநா் அலுவலகம் முன் போராட்டம்

08 1 மகாவலி அபிவிருத்தி என்ற பெயரிலான ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துங்கள் - ஆளுநா் அலுவலகம் முன் போராட்டம்மகாவலி அபிவிருத்தி எனும் பெயரில் தமிழ்ப் பூர்வீகக் கிராமங்களில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று காலை 10 மணியளவில் கவனவீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மகாவலி அபிவிருத்தி எனும் பெயரில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத் தக் கோரியும், குறித்த பிரதேசத்தில் மக்களின் காணிகளை ஆக்கிரமிக்கும் தனியார் விடுதி ஒன்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்பினர் வடக்கு மாகாண ஆளுநருக்கான மகஜர் ஒன்றும் ஆளுநர் செயலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் கடற்றொழில் சங்கங்கள் சார்பில் கையளிக்கப்பட்டது.

இந்தக் கவனவீர்ப்புப் போராட்டத்தில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன், பாதிக்கப்பட்ட மக்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

இது தொடா்பாகக் கருத்து வெளியிட்ட ரவிகரன், “மகாவலி அதிகார சபை காலுான்றுகின்ற இடங்களில் தமிழ் மக்களுக்குக் காணி கொடுத்ததாக எந்தத் தகவலும் இல்லை. தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்கள மக்களைக் குடியேற்றும் நடவடிக்கைதான் நடந்துகொண்டிருக்கின்றது. இதனால், பெருந்தொகையான சிங்களவா்கள் முல்லைத்தீவு பகுதியில் காலுான்றிவிட்டாா்கள். இதனால், சிங்களப் பிரதேச சபை ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதனால், எமது அடுத்த சந்ததிகள் சிங்கள மயமாக்கப்பட்ட முல்லைத்தீவுக்குள்தான் வாழப்போகின்றாா்களா என்ற அச்சம் ஏற்படுகின்றது” என்று தெரிவித்தாா்.

Exit mobile version