போலியான தகவல்களை பரப்பியதற்காகவே அசேல சம்பத் கைது செய்யப்பட்டார்- அஜித்ரோஹண

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவரும் சமூக ஆர்வலருமான அசேல சம்பத் , அடையாளம் தெரியாத 20 நபர்களால் நேற்று இரவு 8.30 மணியளவில் வெள்ளை வானில்  (NE 0833) கடத்தப்பட்டதாக காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அஸ்ட்ரா செனிகா தடுப்பு மருந்து தொடர்பில் போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியமை தொடர்பில் அசேல சம்பத் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு எடுத்துவரப்படும் அஸ்ட்ரா செனிக்கா தடுப்பு மருந்துகளுக்கு, வேறு பதார்த்தங்களை கலப்படம் செய்வதுடன் அந்த தரமற்ற தடுப்பு மருந்துகளையே மக்களுக்கு செலுத்தி வருவதாக குற்றம் சாட்டி வலைத்தளங்களில் செய்தி வெளியிட்டுள்ளதாக,குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அசேல சம்பத் மீது முறைப்பாடு செய்யப்பட்டது. இதையடுத்தே அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.