போர் நடக்கும் உக்ரைனுக்கு IMF முதல்முறை கடன்

உக்ரைன் நாட்டுக்கு 15.6 பில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு ஊழியர் மட்டத்தில் உடன்படிக்கை எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்) தெரிவித்துள்ளது.

போர் நடக்கும் நாடொன்றுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க ஒப்புதல் அளித்திருப்பது இது முதல் முறையாகும்.

ரஷ்ய படையெடுப்புக்குப் பின்னர் உக்ரைனுக்கான மிகப் பெரிய நிதியாகவும் இது உள்ளது. குறிப்பாக அதிக நிச்சயமற்ற நிலைக்கு முகம்கொடுக்கும் நாட்டுக்கு விதிவிலக்காக கடன் வழங்க அனுமதிக்கும் வகையில் ஐ.எம்.எப் விதியில் அண்மையில் மாற்றம் கொண்டு வந்தது.

“உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடரும் நிலையில் அந்நாட்டு பொருளாதாரத்தில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று ஐ.எம்.எப் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் சர்வதேச நன்கொடையாளர்களும் பங்காளிகளும் பெரிய அளவில் சலுகை முறையில் நிதி வழங்க அது உதவும் என்று நாணய நிதியம் குறிப்பிட்டது.