Home ஆய்வுகள் போட்டிக் களமாகிய கொழும்புத் துறைமுக கிழக்கு முனையம் – வேல்தர்மா

போட்டிக் களமாகிய கொழும்புத் துறைமுக கிழக்கு முனையம் – வேல்தர்மா

ராஜபக்ச சகோதரர்கள் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய மாட்டோம் என தொடர்ந்து முழங்கி வந்தனர். 2019 நவம்பரில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கும் 2020 ஓகஸ்ட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்த்தலுக்கும் பரப்புரை செய்யும் போதும் அவர்கள் இதை அடிக்கடி தெரிவித்திருந்தனர். ஆனால் கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய முடிவு செய்தனர். பின்னர் அழுத்தம் காரணமாக அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளனர்.

கொழும்புத் துறைமுகத்தின் வரலாறு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வர்த்தக முக்கியத்துவம் மிக்க கொழும்பு துறைமுகம் உலகின் 24ஆவது பெரிய துறைமுகமாகும். கொழும்புத் துறைமுகம் அரேபியர்கள், சீனர்கள், ரோமர்கள் அதிகம் வர்த்தகம் செய்யும் இடமாக செயற்பட்ட போது பல அரேபியர்கள் அதைச் சுற்றிக் குடியேறி இருந்தனர். 1505ஆம் ஆண்டு இலங்கையை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர் அரபுக்களை அங்கிருந்து விரட்டினர். 1656ஆம் ஆண்டு இலங்கையைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் கொழும்பை தமது தலைநகராக்கினர். 1976இல் வந்த பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்கள் கொழும்பு துறைமுகத்தில் பாரிய அபிவிருத்திகளைச் செய்தனர். 1953ஆம் ஆண்டு துறைமுகத்தில் மேலும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன..

பல முனையங்கள்

134 large 9381f34060655e8e360c664352a89291 போட்டிக் களமாகிய கொழும்புத் துறைமுக கிழக்கு முனையம் – வேல்தர்மா

ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் விளைவாக 1980களில் கொழும்பில் இரண்டு கொள்கலன் முனையங்கள் உருவாக்கப்பட்டன. பின் 1990களில் மேலும் மூன்று முனையங்கள் உருவாக்கப்பட்டன. எரிபொருள் கொள்கலன்களை கையாளும் வசதிகள் 1997ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1996ஆம் ஆண்டு ஒரு மில்லியன் கொள்கலன்களை கையாண்ட கொழும்புத் துறைமுகம் 1997இல் ஒன்றரை மில்லியன் கொள்கலன்களை கையாளும் துறைமுகமாக வளர்ந்தது. கொழும்புத் துறைமுகத்தின் அதிக இலாபகரமான Colombo International Container Terminal (CICT) என்னும் தெற்கு முனையம் சீனாவின் China Merchant Holding  நிறுவனத்திற்கு 2011இல் விற்பனை செய்யப்பட்டது. முதலில் சீன நிறுவனத்திற்கு 50% Aiken Spence   நிறுவனத்திற்கு 35% கொழும்பு துறைமுக அதிகாரசபைக்கு 15% என பன்னாட்டு முனையத்தின் உரிமை பகிரப்பட்டது. பின்னர் சீன நிறுவனம் Aiken Spence   இடமிருந்து 35% உரிமத்தையும் பெற்றுக் கொண்து. சீனா அங்கு இலத்திரனியல் முறமையிலான கப்பல் மற்றும் கொள்கலன் கையாளலை அறிமுகம் செய்தது.

இருந்தும் கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு போக பல கப்பல்கள் பல வாரங்களாக துறைமுகத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கிழக்கு முனையம் அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அபிவிருத்தியை ஆரம்பித்த இலங்கை அரசால் நிதிப் பற்றாக்குறை காரணமாக அதை தொடர முடியாமல் போனபோது இந்தியாவும் ஜப்பானும் கிழக்கு துறமுகத்தின் உரிமத்தை வாங்கி அதை அபிவிருத்தி செய்ய முன்வந்தன.

இந்தியாவிற்கு விற்பனை செய்ய எதிர்ப்பு

ரணில் – மைத்திரி ஆட்சியின் இறுத்திகட்டத்தில், 2019 மே மாதம் 28ஆம் திகதி, கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் விற்பனை செய்யும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. சீனா தெற்கு முனையத்தில் இரகசிய படை நிலைகளை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய இந்தியாவிற்கு கிழக்கு முனையம் அவசியம் தேவைப்பட்டது. அமெரிக்காவைப் பொறுத்தவரை இலங்கை இந்தியாவின் ஆதிக்கப் பிராந்தியத்திற்கு உட்பட்டது. இந்தியா முழுமையான நிதி முதலீடு செய்யாமல் ஜப்பானையும் இணைத்துக் கொண்டது. ஆனால் கிழக்கு முனையத்தை விற்பனை செய்ய மாட்டோம் என முழங்கிய ராஜ்பக்ச்ச கோதரர்கள் விற்பனை செய்ய தயங்கினர். இந்தியாவிடமிருந்து அவர்கள் மீது தொடர்ந்து அழுத்தங்கள் செய்யப்பட்டன. பின்னர் கிழக்கு முனையத்தின் சேவைகளைக் கையாளும் நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டு அதன் உரிமத்தில் 51% இலங்கைக்கு என்றும் 49% இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் என ஒத்துக் கொள்ளப்பட்டது. இந்த முடிவின் அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்ற கோத்தபாய ராஜ்பக்ச அதை கொண்டு பௌத்த மதபீடமான அஸ்கிரியவிற்கு சென்றார். இலங்கையின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை தாம் எதிர்ப்பதாக பீடாதிபதிகள் தெரிவித்தனர். அவர்களைத் தொடர்ந்து இலங்கை துறைமுகத் தொழிற்சங்கங்கள் துறைமுக விற்பனையை கடுமையாக எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தன. அவர்களுக்கு பல தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. ராஜ்பக்சக்களின் ஆளும் கூட்டமைப்பில் உள்ள பத்து கட்சிகளும் தம் எதிர்ப்பைக் காட்டின. இந்தியா சார்பில் கிழக்கு முனையத்தில் முதலிடப் போவது அதானி குழுமம் என்பதை அறிந்த பின் எதிர்ப்பு மோசமாகியது. இதனால் ராஜபக்ச சகோதரர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டனர். கிழக்கு முனைய நிர்வாகத்தை இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் பாரம் கொடுப்பதை நிறுத்தி மேற்கு முனையத்தை அவர்களை அபிவிருத்தி செய்யும்படி வேண்டுகோள் விடுத்தனர். மேற்கு முனையம் முழுக்க முழுக்க ஆரம்பத்தில் இருந்தே நிர்மாணிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.

சீனாவிற்கு இல்லாத எதிர்ப்பு இந்தியாவிற்கு ஏன்?

கொழும்புத் துறைமுகத்தின் தெற்கு முனையம் சீனாவிற்கு விற்பனை செய்யப்பட்ட போது கிளம்பாத எதிர்ப்பு கிழக்கு முனையத்தின் முகாமை கையளிக்கப்படும் போது கிளம்பியது ஏன்? முதலாவது காரணம் சிங்களவர்கள் இடையே உள்ள இந்திய விரோதம். சிங்களவர்கள் சீனாவை தமது எல்லாச் சூழல் நண்பனாகப் பார்க்கின்றார்கள்.  பல கட்டங்களில் அப்படித்தான் சீனா நடந்தது. இலங்கையில் தமிழ் படைக்கலன் குழுக்களை இந்தியா எண்பதுகளின் ஆரம்பத்தில் உருவாக்க முன்னம் இருந்தே இந்தியா மீது சிங்களவர்களுக்கு வெறுப்பு இருக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜேவிபி) தமது போராட்டத்தை அழித்த நாடாகப் பார்க்கின்றனர். பௌத்த மதத்திற்கு இந்தியாவால் ஆபத்து என சிங்கள மதவாதிகள் பலர் நினைக்கின்றனர். சீனா இவர்களை இப்போது தனது தேவைகளுக்காக பயன்படுத்தக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. சிங்கள மதவாதிகளையும் இடதுசாரி அரசியல்வாதிகளையும் அவர்களது தொழிற்சங்கங்களையும் சீனா இலங்கை மீதான அரசுறவியல் நெம்புகோலாகப் பாவிக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் 2021ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொழும்பிற்கு மூன்று நாளாக நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னரே கிழக்கு முனைய முகாமை இந்தியாவின் அதானி குழுமத்திற்கும் ஜப்பனிற்கும் விற்பனை செய்யும் முடிவு இலங்கை அரசால் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் பௌத்த குருமார்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்புக் காட்டியதன் பின்னணியில் சீனா இல்லை எனச் சொல்ல முடியாது.

Exit mobile version