Home செய்திகள் பொது வேட்பாளரா? பகிஷ்கரிப்பா? ஆராய்ந்து முடிவெடுப்பது அவசியம் – பேராசிரியர் ரகுராம் தெரிவிப்பு

பொது வேட்பாளரா? பகிஷ்கரிப்பா? ஆராய்ந்து முடிவெடுப்பது அவசியம் – பேராசிரியர் ரகுராம் தெரிவிப்பு

ruguram பொது வேட்பாளரா? பகிஷ்கரிப்பா? ஆராய்ந்து முடிவெடுப்பது அவசியம் - பேராசிரியர் ரகுராம் தெரிவிப்புபொது வேட்பாளர், பகிஷ்கரிப்பு இரண்டும் ஒரு புள்ளியில்தான் சந்திக்கின்றன. இதில் எது மிகச்சரியானது என விஞ்ஞானபூர்வமாக அரசியல் பூர்வமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி ஊடக இல்லத்தில் ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 19ஆவது ஆண்டு நினைவேந்தலில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எந்தக் கட்டத்திலும் சிங்கள அரசியல் சக்திகளை, சிங்கள அரசியல்வாதிகளை அடுத்து வரக்கூடிய ஆளும் தரப்புகளை நாங்கள். நம்பவே முடியாது என்பதை அன்றிலிருந்து இன்று வரை வரலாறு எங்களுக்கு திரும்பி திரும்பி திரும்பி சொல்லி வந்தாலும்கூட அதை மறுத்து நாங்கள் குறுக்கு ஓட்டம் ஓடுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

சிங்களவர்களை நாம் மாற்ற முடியாது. சிங்கள அரசியல்வாதிகளை நாம் மாற்ற முடியாது, சிங்கள அரசியல் சூழலை நாம் மாற்ற முடியாது. என்ற ஒரு தெளிந்த நிலைப்பாட்டில் சிவராம் இருந்தார். அது புத்திஜீவிகளாக இருக்கலாம். அரசியல் கட்சிகளாக இருக்கலாம். அல்லது சமூக செயல்பாட்டாளர்களாக இருக்கலாம். அவர்களுக்கு ஏதோ ஒரு வரையறை அவர்களுக்குள் ஆழமாக. அவர்களுக்குள் இறங்கியிருக்கக்கூடிய கருத்தியல் தளத்துக்கு அப்பால் அவர்கள் எங்களுக்காக சிந்திப்பார்கள் அல்லது எங்களுடைய நியாயங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்பது எல்லாம் ஒரு பொய்க் கதை என்பதை அவர் மிகத்தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தார்.

இன்றைக்கு நாங்கள் அந்த சந்தியில்தான் மீண்டும் வந்து நிற்கின்றோம். இதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது, “நாங்கள் யாரையும் நம்ப முடியாது. யாருக்காகவும் எங்களுடைய பெறுமதியான வாக்குகளை அளிக்கவும் முடியாது. எனவே, பொது வேட்பாளர் அல்லது பகிஷ்கரிப்பு என்பவை நம் முன்னுள்ள தெரிவுகள். இதில், எது சரியானது என் பதை என்பதை நாங்கள் விஞ்ஞான ரீதியாக – அறிவியல்பூர்வமாக செய்யவேண்டும். உண்மையில் இந்த இரண்டு நிலைப்பாடுகளுமே ஒரு ஒருமித்த புள்ளியில்தான் இருப்பதைத்தான் நான் உணர்ந்து பார்க்கிறேன்.

ஆனால், நிச்சயமாக சிங்கள அரசியல் சக்திகளுக்காக நாங்கள் எப்போதுமே ஆதரவாக இருக்க முடியாது. அது தவறான வழிகாட்டலாகத்தான் இருக்கும்” என்றார்.

Exit mobile version