பெண் காவல்துறையினருக்கு எதிரான காவல் அதிகாரியின் வன்முறை- அம்பிகா சற்குணநாதன் கண்டனம்

பெண் காவல்துறை உத்தியோகத்தருக்கு எதிராக ஆண் காவல்துறை அதிகாரியொருவர் வன்முறையை பிரயோகித்துள்ளமை குறித்து சீற்றம் வெளியிடப்படுகின்றது.

இந்த சம்பவத்தை நிறுவனத்தின் பரந்துபட்ட இயல்பு  -பரந்துபட்ட அரசியல் கலாச்சாரத்திலிருந்து தனித்து பார்க்க முடியாது. ஆணாதிக்க வன்முறை துஸ்பிரயோகம் அரசியல்மயப்படுத்தப்பட்டது அது ஒருபோதும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படுவதில்லை.

இதற்கு தனியொரு அரசாங்கம் பொறுப்பில்லை தொடர்ந்து வந்த பல அரசாங்கங்கள் காரணம். யுத்தத்தின்போது கிளர்ச்சி தடுப்பு படையினர் போல காவல்துறையினர் செயற்பட ஆரம்பித்துள்ளனர். யுத்தகால செயற்பாடுகளிற்கான பொறுப்புக்கூறல் தற்போதும் அலட்சியப்படுத்தப்படுகின்றது- காவல்துறையினரின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து சீற்றம் கொண்டுள்ள பலர் தற்போதும் யுத்தகால உரிமை மீறல்களை நியாயப்படுத்தக்கூடும்.

யுத்தகால மீறல்களிற்கு பொறுப்புக்கூறல் இல்லாமை காரணமாக காவல்துறையினர் தற்போது இவ்வாறு நடந்துகொள்கின்றனர். பொதுவாக காவல்துறையினரின் உரிமை மீறல்கள் கவனத்தை ஈர்க்காதவையாக காணப்படுகின்றன பொதுமக்கள் இது குறித்து சீற்றம் வெளியிடுவதில்லை பாதிக்க்பபட்டவர்கள் சமூகத்தில் ஒதுக்கப்படுகின்றனர் எந்த சலுகையும் அற்றவர்களாக காணப்படுகின்றனர்.

காவல்துறையினரின் துஸ்பிரயோகம் குறித்த பொதுமக்களின் சீற்றம் தெரிவு செய்யப்பட்ட விதத்தில் அமைந்துள்ளது.

20220 இல் மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக சென்று கொண்டிருந்த காணாமல்போனவர்களின் உறவினர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்கு ஏன் எதிர்ப்பும் சீற்றமும் வெளியாகவில்லை.

போதைப்பொருள் குற்றங்களிற்காக கைதுசெய்யப்பட்டவர்கள் காவல்துறை காவலில் உயிரிழக்கும் சந்தர்ப்பங்களில் ஏன் அது குறித்த சீற்றம் வெளியாகவில்லை.

சீற்றம் வெளியிடப்படுதல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட பிரச்சினைகளை புறக்கணிப்பதாகவும் காணப்படுகின்றது. ஆணாதிக்கத்தின் பின்னணியில் வன்முறையை பார்க்கவேண்டும்,காவல்துறையில் உள்ள பெண்கள் பாகுபாடு துன்புறுத்தல்கள் பாலியல் ரீதியிலான கருத்துக்கள்வாய்மொழி துஸ்பிரயோகங்களிற்கு உட்பட்டுள்ளனர்.

அவர்கள் அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளனர்,அவர்களே அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடலாம், பொதுமக்களை துஸ்பிரயோகம் செய்யலாம். அதேவேளை அவர்கள் அமைப்புமுறையினால் பாதிக்கப்படலாம் துஸ்பிரயோகம் செய்யப்படலாம்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கூட கண்காணிப்பு அமைப்புகள் காவல்துறையினரின் வன்முறைகளை கட்டுப்படுத்துவதில் வெற்றிபெறவில்லை. அந்த வருடமொன்றில் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு காவல்துறையினரின் மீறல்கள் குறித்து 400 முறைப்பாடுகள் கிடைத்த அதேவளை தங்களிற்கு 5 முறைப்பாடுகளே கிடைத்தன என அவர்கள் தெரிவித்தனர்.முன்னாள்  காவல் உத்தியோகத்தர்களும் உறுப்பினர்களாக காணப்பட்டமையும்  ஒரு காரணம்.

மனித உரிமை ஆணைக்கு போன்ற கண்காணிப்பு அமைப்புகள் பரிந்துரைகளை முன்வைக்கின்றன அவற்றை தீவிரமாக எடுத்து நடைமுறைப் படுத்த வேண்டும், அனேகமான பரிந்துரைகள் புறக்கணிக்கப்படுகின்றன.