பூமியில் நரகம் என ஒன்றிருந்தால் அது காசாவில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கை தான் -ஐ.நா

பூமியில் நரகம் என ஒன்றிருந்தால் அது காசாவில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கை தான் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. அதனால் பாலஸ்தீனத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 60 பேர் குழந்தைகள்.

“இந்த யுத்தத்தினால் இதுவரை ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக ஐ.நாவிடம் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு அடைக்கலம் கிடைத்துள்ள இடங்களிலும் குறைந்த அளவிலான நீரும், உணவும் தான் கிடைக்கிறது.

மக்கள் தஞ்சம் புகுகின்ற இடங்களிலும் மனிதத்தை இழந்தவர்கள் தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது. அதனால் பூமியில் ஒரு நரகம் என ஒன்றிருந்தால் அது காசாவில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கை” என தெரிவித்துள்ளார் அன்டோனியோ குட்டெரெஸ்.

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் வலுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இஸ்ரேல்-காசா மோதலில் 257 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 8,538 பேர் காயமடைந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.