Tamil News
Home செய்திகள் இலங்கையில் தமிழர்கள் மதத்திற்காக துன்புறுத்தப்படவில்லை அதனால் இந்திய குடியுரிமை இல்லை

இலங்கையில் தமிழர்கள் மதத்திற்காக துன்புறுத்தப்படவில்லை அதனால் இந்திய குடியுரிமை இல்லை

இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மசோதாவில் சேர்க்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், குடியுரிமை (திருத்த) மசோதாவின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு இந்திய குடியரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் ஏன் குடியுரிமை திருத்த மசோதாவில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங்,

“இலங்கையில் உள்ள தமிழர்கள் தங்கள் மதத்திற்காக மட்டுமே துன்புறுத்தப்படவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பிரச்சினை தீர்க்கப்பட்டது. மோதலுக்கும் துன்புறுத்தலுக்கும் வித்தியாசம் உள்ளது” என்றார்.

இஸ்லாமிய நாடுகளில் மத துன்புறுத்தலுக்கு உள்ளான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்தர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய ஆறு மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை நோக்கமாக கொண்டு குடியுரிமை (திருத்த) மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது.
இந்த நிலையில் இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மசோதாவில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version