Home செய்திகள் புத்தரின் பெயரால் இறுக்கமடையும் ஆரிய கூட்டுறவு – சிறிலங்கா இந்திய படைத்துறை குடும்ப கூட்டுறவு.

புத்தரின் பெயரால் இறுக்கமடையும் ஆரிய கூட்டுறவு – சிறிலங்கா இந்திய படைத்துறை குடும்ப கூட்டுறவு.

இலங்கை இராணுவத்தை சேரந்த 160 பேர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் புத்தகாயாவிற்கான விசேட யாத்திரையை ஜூன் 15-18 காலப் பகுதியில் இரண்டாவது தடவையாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ளது.

இரு நாடுகளினதும் ஆயுதப் படையினரிடையே இடைத்தொடர்பு மற்றும் நட்பு என்பவற்றை அதிகரிக்கும் நோக்கில் இரு நாடுகளுக்குமிடையிலான கலந்துரையாடலின் அடிப்படையில் இந்த விசேட யாத்திரை ஏற்பாடு கடந்த வருடம் ஆரம்பமாகியது.

இந்த வருட யாத்திரை, கடந்த வருடத்தை விட இரண்டிலிருந்து நான்கு என அதிகரித்த நாட்களுக்கு மட்டுமன்றி இந்தியாவிலிருந்து 160 ஆயுதப் படையினர் மற்றும் அவர்களின் குடும்பங்கள் இலங்கைக்கு பரஸ்பரம் விஜயம் செய்தல் என்பதையும் உள்ளடக்கி விரிவுபடுத்தப்பட்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

யாத்திரையின் போது, இலங்கை ஆயுதப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் புனித மாகாபோதி ஆலயம், 80 அடி உயர புத்தர் சிலை, ராஜ்கிர் மற்றும் நாலந்த அருங்காட்சியகம் என்பவற்றுக்கு விஜயம் செய்வார்கள்.

இலங்கை இராணுவத் தளபதியின் ஒரு விசேட வேண்டுகோளின் பெயரில் வரும் இந்தியக் குழுவினர் இலங்கையிலுள்ள முக்கியமான இடங்களுக்கு விஜயம் செய்வார்கள்.z p07 Indian HC 888 புத்தரின் பெயரால் இறுக்கமடையும் ஆரிய கூட்டுறவு - சிறிலங்கா இந்திய படைத்துறை குடும்ப கூட்டுறவு.

இது, கண்டியில் புனித தந்த ஆலயத்திற்கு விஜயம் செய்து வணக்கம் செலுத்துதல் மற்றும் காலிக்கான விஜயம் என்பவற்றை உள்ளடக்கியிருக்கும். இந்திய ஆயுதப் படையினர் மற்றும் அவர்களது குடும்பங்களின் ஒரு பெரும் குழு ஒரு விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருவது இதுவே முதல் தடவையாகும்.

இந்திய விமானப் படையின் C – 17 குளோப்மாஸ்டர் விமானம் இலங்கை மற்றும் இந்திய பயணக் குழுவினரின் போக்குவரத்துக்காக விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலாச்சார மற்றும் வரலாற்று ஈடுபடுதல்களுக்கு மேலதிகமாக, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் ஆயுதப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கிடையில் பெரியளவிலான இடைத்தொடர்புகளும் இதன்போது மேற்கொள்ளப்படும்.

இலங்கைக்கான, இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து மற்றும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆகியோர் இலங்கைக்கு வரும் இந்தியக் குழுவினரை வரவேற்பதற்கும் மற்றும் இலங்கைக் குழுவினரை இந்தியாவிற்கு வழியனுப்பி வைப்பதற்குமாக விமான நிலையத்தில் இருந்தனர்.

Exit mobile version