புதிய குடியேறிகளை குறைக்கும் எண்ணத்தில் அவுஸ்திரலியா

கடந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், மூன்றில் இரண்டுப் பங்குக்கு அதிகமானோர் அவுஸ்திரேலியாவில் மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை விரும்பவில்லை எனக் கூறப்பட்டது.

அதே ஆண்டு, அவுஸ்திரேலிய அரசு ஓர் ஆண்டுக்கான நிரந்தர குடியேற்ற எண்ணிக்கையை 160,000 ஆக குறைத்தது. அதாவது 30,000 இடங்கள் அப்படியே குறைக்கப்பட்டன. இது ஏறிக்கொண்டிருக்கக்கூடிய ரியல் எஸ்டேட் விலையைக் கட்டுப்படுத்த உதவும் எனத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் உள்ள இட நெருக்கடியை தவிர்க்க உதவும் எனக் கூறப்பட்டது.

“இது அவுஸ்திரேலியர்களின் வாழ்க்கைத் தரத்தை பாதுகாப்பதற்கான திட்டம்,” என அப்போது கூறினார் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன்.

அந்த வகையில், அவுஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் புதிய குடியேறிகளை அனுமதிக்கும் எண்ணிக்கையை குறைக்கும் எண்ணத்திற்கு கொரோனா சூழல் மேலும் உந்துதலை அளித்திருக்கிறது.