Tamil News
Home செய்திகள் பி.சி.ஆர். முடிவுகள் வெளிவருவதில் தாமதம் – தொற்றாளர் தொகையை வெளியிடுவதில் சிரமம்

பி.சி.ஆர். முடிவுகள் வெளிவருவதில் தாமதம் – தொற்றாளர் தொகையை வெளியிடுவதில் சிரமம்

இலங்கையில் கடந்த சில நாட்களாகத் தினந்தோறும் ஒன்பதாயிரம் வரையில் சராசரியாக பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அந்தளவு தொகையைக் கையாள முடியாது ஆய்வுகூடங்கள் திணறுவதால் முடிவுகள் வெளிவருவதில் தாமதங்கள் நிலவுகின்றன என்று அறியமுடிகின்றது.

ஆய்வுகூடங்களில் ஒரு நாளில் இத்தனை பி.சி.ஆர். பரிசோதனைதான் செய்யமுடியும் என்ற வரையறை இருப்பதால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிகள் வெளிவருவதில் தாமதம் காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஷ்ட அங்கத்தவர் வைத்தியர் ரட்ணசிங்கம் தணிகைவாசன் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

Exit mobile version