பிரித்தானிய தேர்தலால் அச்சமடையும் சிறிலங்கா

பிரித்தானியாவில் எதிர்வரும் 12ஆம் திகதி நடக்கவிருக்கும் பொதுத் தேர்தல் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. இதை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் தேர்தல் இலங்கையின் தலையெழுத்தை மாற்றக்கூடியது என அவர் அச்சம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பிரிட்டனில் புலம்பெயர்ந்த ஈழத்தவர்கள் வசிக்கின்றனர். இவர்கள் தேர்தல் பெறுபேறுகளை மாற்றக்கூடிய அளவில் உள்ளனர். பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள பிரதேசங்களில் இலங்கை இனப்படுகொலை தொடர்பாக பேசப்படுவதாக பிரிட்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் கட்சிகள் மேற்படி புலம்பெயர் சமூகத்தை திருப்திப்படுத்தும் நடவடிக்கையில் இறங்குவார்கள்.

முன்னைய தேர்தல் காலங்களிலும் இவ்வாறு நடந்துள்ளது. எதிர்வரும் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் வேகமாக நடைபெற்று வருகின்றது.

இலங்கையைப் பற்றி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு பிரதான கட்சி இலங்கையில் உள்ள உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் தினேஸ் குணவர்த்தன கூறினார்.