Tamil News
Home உலகச் செய்திகள் பிரித்தானியாவில்  முழு ஊரடங்கு உத்தரவு

பிரித்தானியாவில்  முழு ஊரடங்கு உத்தரவு

பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரசும் வேகமாக பரவி வருகிறது.

உலகளவில் 86,105,851 பேர் கொரோனா வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் 1,860,540 உயிரிழந்துள்ளனர்.

இதில் 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் பிரித்தானியாவில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால்   பாதிப்பும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதன்காரணமாக பாதிப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும் புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுடங்காமல் பரவியதால், பிரித்தானியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பிரித்தானியா முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இந்த தேசிய அளவிலான ஊரடங்கு ஆறு வாரங்களுக்கு நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. நள்ளிரவு முதல் அமலான ஊரடங்கால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெறும் என்று கூறி பிரதமர் போரிஸ் ஜான்சன், மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version