பிரித்தானியாவில் சிறிலங்கா தூதுவராலயத்திற்கு முன் போராட்டம்: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

WhatsApp Image 2023 02 05 at 3.08.58 AM பிரித்தானியாவில் சிறிலங்கா தூதுவராலயத்திற்கு முன் போராட்டம்: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

சிறிலங்காவின் 75 வது சுதந்திர தினத்தைக் கறுப்பு நாளாக அறிவித்து, ஒற்றையாட்சிக்கெதிரான  கோஷங்களை எழுப்பியும், தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் அரசியற் தீர்வாகத் தமிழீழமே இருக்கும் என்ற முழக்கத்தை எழுப்பியும் அங்கு திரண்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றுகூடிய புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பறை இசை முழக்கங்களுடன் தமிழீழத் தேசிய கொடிகளைக் கைகளில் ஏந்தியவாறு “13 வது திருத்தச் சட்டம் தீர்வல்ல,ஒற்றையாட்சி அரசியல் யாப்பே இனவழிப்பிற்கு காரணம்”என்றும் சர்வதேசங்களை நோக்கி தொடர் கொட்டொலிகளை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

WhatsApp Image 2023 02 05 at 5.49.09 AM பிரித்தானியாவில் சிறிலங்கா தூதுவராலயத்திற்கு முன் போராட்டம்: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

“ஈழத்தமிழர்களாகிய நாங்கள் சிறிலங்கன் என்ற அடையாளத்தை நிராகரிக்கின்றோம், சிறிலங்காவின் அரசியலமைப்பை நிராகரிக்கின்றோம் , சிறிலங்காவின் சுதந்திர தினம் தமிழர்களுக்குக் கரிநாள்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சொல்லியங்களையும் ஏந்தியிருந்தனர்.

வழமைபோல் இல்லாது இந்த வருடம் லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் சிறீலங்காவின் இனவழிப்பின் அடையாளமான சிங்கக் கொடி தமிழ் மக்களின் எழுச்சி கண்டு சிங்கள இனத்தின் சுதந்திர நாளான இன்று பறக்கவிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2023 02 05 at 3.08.58 AM 1 பிரித்தானியாவில் சிறிலங்கா தூதுவராலயத்திற்கு முன் போராட்டம்: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

அதே கம்பத்தில் கறுப்பு பலூன்கள் ஆர்ப்பாட்டத்தில் நின்ற மக்களால் பறக்க விடப்பட்டன. தூதுவராலயத்தைச் சூழ தமிழீழ தேசியக்கொடி விடுதலை முழக்கத்துடன் உரிமைக்காகப் பறந்து கொண்டிருந்தது. அதேநேரத்தில் தமிழ் மக்களால் சிறிலங்காவின் ஒற்றை ஆட்சி அரசியல் யாப்பு தீயிட்டு எரிக்கப்பட்டு இருந்தது.