பிரான்ஸ் பரிஸ் காவல்துறை தலைமையகம் மீது தாக்குதல்

பிரான்ஸ் பரிஸ் காவல்துறை தலைமையகத்தில் இன்று (03) பிற்பகல் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று 4 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெண் அதிகாரி ஒருவரும் அடங்கியுள்ளார். இந்தத் தாக்குதலை மேற்கொண்ட நபரும் பின்னர காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இல்-து-லா-சித்தே பகுதியில் அமைந்துள்ள தலைமையகத்தின் உள்ளே இந்தத் தாக்குதலை மேற்கொண்ட 45 வயதான நபரும் அங்கு பணிபுரிந்த பணியாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் சுமார் 20 வருடங்களாக அங்கு பணிபுரிந்த நிலையில் இந்தத் தாக்குதலை அவர் மேற்கொண்டமை சக பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தாக்குதலுக்குரிய காரணங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தாக்குதலா என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தத் தாக்குதலையடுத்து பரிஸ் காவற்துறை தலைமையகப் பணியகத்திற்கு பிரெஞ்சு அரச தலைவர் இமானுவேல் மக்ரன் பிரதமர் எடுவாட் பிலிப் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் விரைந்து நிலைமையை பார்வையிட்டுள்ளனர்.