Tamil News
Home செய்திகள் பிரான்ஸ் இசை நிகழ்ச்சியில் பாடிய ஈழத்து சிறுமி

பிரான்ஸ் இசை நிகழ்ச்சியில் பாடிய ஈழத்து சிறுமி

பிரான்ஸில் நடைபெறும் ‘வொய்ஸ் கிட்ஸ்’ என்ற இசை நிகழ்சியில் ஈழத்துச் சிறுமி பங்குபற்றி தமிழில் பாடிய பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் பிரபல்யமாகி வருகின்றது.

உலக நாடுகளில் நடைபெற்று வரும் பிரபலமான இசை நிகழ்ச்சிகளில் பிரான்ஸில் நடைபெறும் ‘வொய்ஸ் கிட்ஸ்’ நிகழ்ச்சியும் ஒன்றாகும்.  இந்நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.

கடந்த சனிக்கிழமை(05) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈழத்தைச் சேர்ந்தவரும், சுவிஸில் வசித்து வருபவருமான சிறுமி கனிஷா கலந்து கொண்டு தமிழ் சினிமா பாடல் ஒன்றை பாடியிருந்தார்.

அவரது குரலால் ஈர்க்கப்பட்ட நடுவர்கள் அவரை தேர்ந்தெடுத்ததுடன், அவருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பிரபல்யமாகி வருகின்றது.

 

Exit mobile version