பிரான்ஸில் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக போராட்டம்

பிரான்ஸில் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகளும் பத்திரிகையாளர்களும் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்த மசோதா தகவல் அறியும் சுதந்திரத்தை மீறுவதாக  போராட்டக்கார்ர்கள் கருதுகின்றனர்.

இந்த மசோதாவின்படி, பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கோடு காவல் அதிகாரிகளின் புகைப்படங்களை வெளியிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.

இந்நிலையில், பாரிஸ் மற்றும் பிரெஞ்சு நகரங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது. எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு, அம்னஸ்டி இன்டர்நேஷனல் பிரான்ஸ், மனித உரிமைகள் லீக், பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் பிற குழுக்கள் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளன.